'எல்லாம் மனைவி வந்த நேரம்..' குடியரசு தின விழாவில் மணக்கோலத்தில் வந்து கலெக்டரிடம் விருது பெற்ற ஊழியர்

திருமணம் முடிந்த கையோடு கலெக்டரிடம் விருது பெற்ற புதுமண தம்பதிக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2023-01-26 15:51 GMT

திருச்சி,

இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று அரசு அலுவலகங்களில் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அந்த வகையில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஆடியோ ஆப்பரேட்டராக பணிபுரியும் செல்வமணி, தனது மனைவி சவுந்தரியாவுடன் மணக்கோலத்தில் வந்து கலெக்டர் பிரதீப் குமாரிடம் விருது பெற்றார். காலை 8 மணிக்கு திருமணம் முடிந்த நிலையில், உடனடியாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து விருதை பெற்றுக்கொண்ட புதுமண தம்பதிக்கு அங்கிருந்த அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வமணி, இது தனக்கு கிடைத்த முதல் விருது என்றும், திருமண நாளில் விருது பெற்றது மகிழ்ச்சியை தருவதாகவும், எல்லாம் தனது மனைவி வந்த நேரத்தின் அதிர்ஷ்டம் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்