மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மேம்பாட்டு திறன் வகுப்புகள்

ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மேம்பாட்டு திறன் வகுப்புகள் நடந்தது.

Update: 2022-10-07 18:45 GMT

ஆலங்குளம்:

ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில், முதல் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு மேம்பாட்டு திறன் வகுப்புகள் "இன்னோவேட்டிவ் ஹெஜ்ஆர் - டிரைனிங் சர்வீசஸ், சென்னை" நிறுவனத்தினரால் நடத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்பிற்கான தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள ஆடம் ஸ்மித் அரங்கத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியினை கல்லூரியின் செயலாளர் எழில்வாணன் தொடங்கி வைத்து, மாணவர்கள் தங்கள் கல்வித் திறனோடு அறிவுத் திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கூறினார். கல்லூரியின் முதல்வர் வேலாயுதம் முன்னிலை வகித்தார்.

நிறுவனத்தின் மேலாளர் டாக்டர் சுந்தர்ராஜன் தனது சிறப்புரையில், மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்‌. மாணவர்கள் படிப்போடு சேர்த்து மொழித்திறன் மற்றும் உற்றுநோக்குதல் திறனை வளர்த்து கொள்ள ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை முதல்வர் ஆலோசனைப்படி ஐன்ஸ்டீன் கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்