பெரம்பலூரில் ரெயில் போக்குவரத்தை உருவாக்க வலியுறுத்தல்

பெரம்பலூரில் ரெயில் போக்குவரத்தை உருவாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-08-20 18:12 GMT

பெரம்பலூரில் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பேரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் அறிவழகன் சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார். மாநில துணை செயலாளர் சிங்காரவேலன் நிறைவுரையாற்றினார். பெரம்பலூர் மாவட்டத்தில் ரெயில் போக்குவரத்தை உருவாக்கிட வேண்டும். பெரம்பலூரில் அரசு வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும். சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை தொடங்க வேண்டும்.

கொட்டரை மருதையாறு நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். கை.களத்தூர் பஸ் நிறுத்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். கை.களத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ரூ.1 கோடியே 50 லட்சம் அரசு நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப்பட்ட அந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 11, 12, 13-ந் தேதிகளில் நடைபெறவுள்ள சங்கத்தின் மாநில மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்