கோரிக்கைகளை வலியுறுத்திகட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினர் பிச்சைமணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கணேசன், ராஜாமணி, முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும். கட்டுமான நலவாரியத்தின் 56-வது கூட்ட முடிவை அரசாணையாக வெளியிட வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இயற்கை மரணத்துக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் கட்டுமான தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.