நல்லம்பள்ளி ஒன்றியத்தில்பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் சீரமைக்க வேண்டும்ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

Update: 2023-07-22 19:30 GMT

நல்லம்பள்ளி :

நல்லம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேஸ்வரி பெரியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய பொதுநிதி மற்றும் கவுன்சிலர் நிதியில் இருந்து நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து, தரமில்லாமல் பணிகள் குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொப்பூர் வாரச்சந்தையை மேம்பாடு செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நல்லம்பள்ளி ஒன்றியத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் மற்றும் கழிப்பிட கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் ராஜா, முருகன், ராஜீவ்காந்தி, காமராஜ், சசிகுமார், புனிதம் பழனிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்