ரெயில்வே கேட் திடீர் பழுது

ரெயில்வே கேட் திடீர் பழுது ஏற்பட்டது.;

Update: 2023-08-27 18:54 GMT

கரூர் மாவட்டம், மாங்காய் சோளிபாளையம் ரெயில்வே கேட் நேற்று மாலை 6.45 மணி அளவில் கோயம்புத்தூர்-மயிலாடுதுறை பயணிகள் ெரயில் செல்வதற்காக மூடப்பட்டது. ெரயில் சென்ற பின் ெரயில்வே கேட்டைதிறக்க முயன்றபோது பழுது ஏற்பட்டதால் திறக்க முடியவில்லை. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரம் போராடி பழுதான ரெயில்வே கேட்டை சரி செய்தனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்