இமானுவேல் சேகரன் நினைவு தினம்

சங்கரன்கோவிலில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2022-09-12 14:18 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சார்பில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊர் நாட்டாண்மைகள் மாடசாமி, சுப்பையா ஆகியோர் தலைமை தாங்கினார். இதனை முன்னிட்டு பஸ்நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி, சங்கரன்கோவில் நகர சபைதலைவி உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணன், நகர்மன்ற உறுப்பினர்கள் புனிதா, வேல்ராஜ், மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், பா.ஜனதா நகர இளைஞர் அணி தலைவர் விக்னேஷ், தே.மு.தி.க. பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார், சமுதாய நாட்டாமைகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்