இமானுவேல் சேகரன் நினைவு தினம்

ஆத்தூரில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது

Update: 2022-09-11 17:50 GMT

ஆறுமுகநேரி:

ஆத்தூர் மெயின் பஜாரில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆத்தூர் சுற்று வட்டார தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மூத்த தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் ஆத்தூர் பா. ராஜேந்திரன், ஆத்தூர் குளம் கீழ் பகுதி விவசாயிகள் சங்க தலைவர் சி.பி.செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்தூர் நகர பஞ்சாயத்து துணை தலைவர் மகேஸ்வரி முருகப்பெருமாள், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.ம.மு.க., எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை அமைப்பாளர் சுப்பிரமணியம், ஆத்தூர் நகர தி.மு.க. செயலாளர் எம்.பி.முருகானந்தம், ஆத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் எம்.பி.சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்