மீன்வள திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

மீன்வள திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-07-05 21:09 GMT

மீன்வள திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீன்வள மேம்பாட்டு திட்டம்

மாவட்டத்தில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டுக்கு புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்கும் திட்டம், கொல்லைப்புற அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம், நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்கும் திட்டத்தில் ஆதிதிராவிடர் பிரிவில் 20 ஹெக்டேர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் பிரிவு பயனாளிகளுக்கு ஆகும் செலவினத்தொகை ரூ. 7 லட்சத்திற்கு 60 சதவீதம் மானியமாக ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படும்.

பயனாளிகள் தேர்வு

நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்தெடுத்தல் திட்டத்தின்கீழ் பொதுப் பிரிவு பயனாளிகளுக்கு ஒரு அலகுக்கு ஆகும் செலவுத்தொகை ரூ.3 லட்சத்தில் மானியமாக 40சதவீதம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படும்.

நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டத்தில் பொதுப்பிரிவில் ஒரு அலகு மற்றும் மகளிர் பிரிவில் ஒரு அலகு ஆக மொத்தம் 2 அலகுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு ஒரு அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ. 8 லட்சத்தில் 40 சதவீத மானியமாக ரூ.3 லட்சத்து 20ஆயிரமும், மகளிர் பிரிவினருக்கு 60 சதவீத மானியமாக ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் மற்றும் மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் 15 தினங்களுக்குள் விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் மூப்பு நிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் விருதுநகர் வேல்சாமி நகர் என்ற முகவரியில் இயங்கி வரும் விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்