தக்காளி தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்

தேன்கனிக்கோட்டை அருகே தக்காளி தோட்டத்தில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.

Update: 2023-09-02 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

யானைகள் அட்டகாசம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திம்மசந்திரம் வனப்பகுதியில் 4 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த 4 யானைகள் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து ெவளியேறி லிங்கதீரனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சந்திரன் (வயது 49) என்பவரது தக்காளி தோட்டத்தில் சூரிய மின்வேலியை சேதப்படுத்தியது.

பின்னர் தோட்டத்தில் புகுந்து தக்காளியை காலால் மிதித்தும், தின்றும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. நேற்று காலை சந்திரன் தோட்டத்திற்கு சென்றபோது யானைகள் தக்காளியை சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

இழப்பீடு

இதையடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளால் சேதமடைந்த தக்காளி தோட்டத்தை பார்வையிட்டனர். அப்போது தக்காளிக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்ெகாண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்