பேரணாம்பட்டு அருகே மீண்டும் யானைகள் அட்டகாசம்

பேரணாம்பட்டு அருகே மீண்டும் யானைகள் மாந்தோப்பை சூறையாடியது.

Update: 2023-06-06 18:25 GMT

பேரணாம்பட்டு வனசரக பகுதியில் பத்தலப் பல்லி, சேராங்கல், எருக்கம்பட்டு, கோட்டையூர், அரவட்லா, ரங்கம் பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதியை யொட்டி அமைந்திருப்பதால் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் இங்குள்ள விவசாய நிலங்கள், வாழை, மாந்தோப்புகளில் புகுந்து சூறையாடி அட்டகாசத்தில் ஈடுட்டன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ரங்கம் பேட்டை கிராமத்திலுள்ள முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் புகுந்து 15 மா மரங்களை முறித்து சேதப்படுத்தியதோடு அறுவடைக்கு தயாராக இருந்த 2 டன் மாங்காய்களை ருசித்து துவம்சம் செய்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டன.

இதுபற்றி தகவலறிந்ததும் பேரணாம்பட்டு வனத்துறையினர் கிராம மக்களுடன் சென்று பட்டாசு வெடித்து அருகிலுள்ள காப்புக் காட்டிற்குள் விரட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்