ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோவில் யானை ஆரோக்கியமாக உள்ளது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ேகாவில் யானை ஆரோக்கியமாக உள்ளது என புலிகள் காப்பக இயக்குனர் டாக்டர் திலீப் குமார் கூறினார்.

Update: 2023-03-14 19:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ேகாவில் யானை ஆரோக்கியமாக உள்ளது என புலிகள் காப்பக இயக்குனர் டாக்டர் திலீப் குமார் கூறினார்.

அதிகாரிகள் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா. இந்த யானை கிருஷ்ணன் கோவில் மண்டபத்தில் தங்கி உள்ளது. இந்த யானைைய ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் டாக்டர் திலீப் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கால்நடை துறை உதவி இயக்குனர்கள் ராஜேஸ்வரி, நந்தகோபால், ஸ்ரீவில்லிபுத்தூர் கால்நடை உதவி மருத்துவர் சுப்பிரமணி, ஆண்டாள் கோவில் கண்காணிப்பாளர் ஆவுடை தாய் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்விற்கு பிறகு டாக்டர் திலீப் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

3 மாதத்திற்கு ஒரு முறை ஆண்டாள் கோவில் யானையை ஆய்வு செய்வது வழக்கம். யானை ஜெயமால்யதாவை ஆய்வு செய்தேன். ஆண்டாள் கோவில் யானை மிகவும் ஆரோக்கியமாகவும், எவ்வித குறையும் இன்றி உள்ளது.

நீச்சல் குளம்

இந்த யானையை குழந்தையைப் போல் ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் பார்த்துக் கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவர் யானை குளிக்கும் நீச்சல் குளத்திற்கு சென்று பார்வையிட்டார். யானை தங்கி இருக்கும் மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை அவர் ஆய்வு செய்தார். யானை தங்கி உள்ள மண்டபத்தில் கூடுதலாக செய்ய வேண்டிய வசதிகளை குறித்து அறிவுரை வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்