காட்டாற்று தண்ணீரில் விளையாடி யானை உற்சாகம்

Update: 2023-05-02 19:30 GMT

தேன்கனிக்கோட்டை:-

தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதியில் பலத்த மழை பெய்தது. அஞ்செட்டி பகுதியில் பெய்த மழையால் அஞ்செட்டி மலை பகுதியில் உள்ள காட்டாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து சென்றது. அஞ்செட்டி அருகே வண்ணாத்துப்பட்டி என்ற இடத்தில் சாலையின் குறுக்கே செல்லும் தொட்டாற்றில் அப்பகுதியில் உள்ள யானை ஒன்று கோடை வெயில் தாகத்தால் தண்ணீரில் இறங்கி விளையாடியது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் யானையை பார்க்க திரண்டனர். தகவல் அறிந்த அஞ்செட்டி வனத்துறையினர் யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டினர்.

மேலும் செய்திகள்