யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
தென்காசி மாவட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.;
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. கடையநல்லூர், சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் குற்றாலம் வனச்சரக பகுதிகளில் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் பேரில் வனச்சரகர்கள் சுரேஷ், பாலகிருஷ்ணன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் யானைகள் கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. வன உயிரியியலாளர் டாக்டர் கந்தசாமி கணக்கெடுப்பு நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியை பெற்றவர்கள் நேற்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.