தலமலை அருகே திக்... திக்... காட்சி காட்டு யானையிடம் இருந்து உயிர் தப்பிய விவசாயி
தலமலை அருகே திக்... திக்... காட்சி காட்டு யானையிடம் இருந்து உயிர் தப்பிய விவசாயி
தாளவாடி
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தலமலையில் இருந்து திம்பம் செல்லும் வனச்சாலையில் ஒற்றை யானை உலா வந்து கொண்டிருந்தது. அப்போது நெய்தாளபுரத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் சத்தியமங்கலத்தில் இருந்து நெய்தாளபுரம் நோக்கி அந்த வனச்சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த வனச்சாலையில் உள்ள வளைவில் திரும்பியபோது யானையை அவர் கவனிக்கவில்லை. ஆனால் யானை, அவரை கவனித்ததுடன் அவரை துரத்த தொடங்கியது. இதில் அவர் மோட்டார்சைக்கிளுடன் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். உடனே அவர் எழுந்து ஓடினார். எனினும் யானை அவரை துரத்த தொடங்கியது. அப்போது ராமசாமிக்கு பின்னால் ஜீப்பில் ராமரணை பகுதிக்கு வந்தவர்கள் சத்தம் போட்டு கத்தியதுடன், யானையை விரட்டினர். இதனால் சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த திக்... திக்... காட்சியை ஜீப்பில் வந்தவர்கள் தங்களுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.