பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை

தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தியது.

Update: 2022-11-13 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட குல்லட்டி காப்புக்காட்டில் 4 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதில் ஒரு யானை மட்டும் தனியாக பிரிந்து வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய அந்த காட்டு யானை சாலிவாரம் கிராமத்திற்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்