மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-04 19:08 GMT

அரியலூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் முதல்-அமைச்சருக்கு கலெக்டர் மூலம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. அரியலூர் கோட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொதுத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, அரியலூர் மாவட்டத்தில் மின்வாரியத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநில செயலாளர் அகஸ்தின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தார். இதில் திட்ட செயலாளர் பன்னீர்செல்வம், கருப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்