கேங்மேன் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் தர்ணா

கேங்மேன் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-22 18:42 GMT

மின் ஊழியர்கள் தர்ணா

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, பெரம்பலூர் வட்ட கிளை சார்பில் கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நேற்று மாலை நடந்தது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு அமைப்பின் மாநில செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பன்னீர் செல்வம், பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மின் ஊழியர்கள் கேங்மேன் பணியாளர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு விருப்ப இடமாறுதல் உத்தரவை விரைந்து வழங்கிட வேண்டும். 6 சதவீத ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும். விரிவாக்க பணிகள் மட்டும் வழங்கிட வேண்டும். வேலை பளுவை திணிப்பதை கைவிட வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

கள உதவியாளராக பதவி மாற்றம் செய்திட வேண்டும். விபத்தில்லா மின் வாரியத்தை அமைத்திட வேண்டும். மின் விபத்தை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி முறையாக பாதுகாப்பு வகுப்பு நடத்திட வேண்டும். விடுமுறை நாட்களில் கட்டாயமாக பணிக்கு வர வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். உள்முக தேர்வு மூலம் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு சட்ட சலுகைகளை வழங்கிட வேண்டும். விடுபட்ட கேங்மேன்களுக்கு பணி நியமனம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசும், மின் வாரியமும் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்