நண்பருடன் சீட்டு விளையாடிய போது விஷ மாத்திரை தின்று மின்வாரிய ஊழியர் தற்கொலை;நாகர்கோவிலில் பரிதாபம்
நாகர்கோவிலில் நண்பருடன் சீட்டு விளையாடிய போது விஷ மாத்திரை தின்று மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் நண்பருடன் சீட்டு விளையாடிய போது விஷ மாத்திரை தின்று மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 52). இவர் குமாரவிளை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று தன்னுடைய நண்பரான நாகர்கோவில் நெசவாளர் காலனியை சேர்ந்த பால்ராஜ் உடன் சேர்ந்து பரமார்த்தலிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவில் முன்பு சீட்டு விளையாடி கொண்டு இருந்தார். அப்போது சாந்தகுமார் திடீரென தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டார். இதனை கண்ட பால்ராஜ் அதிர்ந்து போனார். பிறகு சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி சாந்தகுமார் மயங்கினார்.
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தகுமாரின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.