மின்வாரிய ஊழியர் தற்கொலை

பாளையங்கோட்டை அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்தார்

Update: 2022-10-11 21:11 GMT

பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). மின்சார வாரிய ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

நேற்று காலை இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனையறிந்த அப்பகுதியினர் சிவந்திப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கணேசன் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தார். அவர் 4 நாட்களுக்கு முன்பு இறந்துள்ளதாக தெரிகிறது. உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் இவரை சஸ்பெண்டு (பணி இடைநீக்கம்) செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கணேசன் 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்