மின்வாரிய ஊழியர் தற்கொலை
வாலாஜா அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
வாலாஜா
வாலாஜா அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த ஒழுகூர் குப்பம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் தயாளன். இவரது மகன் சரவணன் (வயது 26). இவர், திருவள்ளூர் மாவட்டம் வி.புதூரில் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.