மெட்டாலா பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

Update: 2023-07-12 19:00 GMT

ராசிபுரம்:

ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராசிபுரம் தாலுகா மெட்டாலா துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிலிப்பாகுட்டை, கணவாய்ப்பட்டி, கப்பலூத்து, ராஜபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, மெட்டாலா, உரம்பு, ஆயில்பட்டி, காட்டூர், காமராஜ் நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியக்கோம்பை, பெரப்பன் சோலை, மூலக்குறிச்சி, ஊனாந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர் கோம்பை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்