மின்சார ஓய்வு பெற்ற தொழிலாளர் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம்
மின்சார ஓய்வு பெற்ற தொழிலாளர் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்சார ஓய்வு பெற்ற தொழிலாளர் அசோசியேசனின் விருதுநகர் வட்டக்கிளையின் பொதுக்குழு கூட்டம் தலைவர் ஆதிமூலம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் குருசாமி செயல் அறிக்கை வாசித்தார். பொருளாளர் முருகேசன் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். பல்வேறு மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். பின்னர் 2003-ம் ஆண்டுக்கு பின்னர் பணி ஓய்வு பெற்றவர்களுக்கும், பழைய ஓய்வூதிய திட்டத்தின் படி ஓய்வூதியம் வழங்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும். 2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்து பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் ஆதிமூலம் தலைவராகவும், முருகேசன் செயல் தலைவராகவும், செயலாளராக சிவசங்கரனும், பொருளாளராக திருஞான குரு சக்திவேலும், ஆலோசகராக சங்கரலிங்கமும், மேலும் 4 உப தலைவர்களும், 5 இணைச் செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக காசிராஜன் வரவேற்றார். முடிவில் கதிரேசன் நன்றி கூறினார்.