மின்கம்பம் காலில் விழுந்த சம்பவம் - விளையாட்டு வீரரை சந்தித்து நிதி வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு
விளையாட்டு வீரரை சந்தித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிவாரண நிதி வழங்கினார்.
மதுரை,
மின்கம்பம் விழுந்த விபத்தில் காலில் காயம் அடைந்த விளையாட்டு வீரரை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து நிதியுதவி அளித்தார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விளையாட்டு வீரரை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர், ரூ.6 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதி அளித்ததாகவும், உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.