சேலம் தாதகாப்பட்டியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
சேலம் தாதகாப்பட்டியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் தெரு பகுதியை சேர்ந்தவர் தர்மன். இவருடைய மகன் குப்புராஜ் (வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன் பகுதியில் துவைத்த தனது துணிகளை காய வைத்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது துணியை உதறி காயப்போட்ட போது, அருகில் இருந்த மின் கம்பியில் துணி பட்டதால் குப்புராஜ் மீது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர், உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.