உப்பிடமங்கலத்தில் ஒளிமிகு பாரதம், ஒளி மயமான எதிர்காலம் தலைப்பில் மின்சக்தி மின்சார பெருவிழா நடைபெற்றது. இதற்கு கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா தலைமை தாங்கினார். கரூர் மேற்பார்வை பொறியாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். நமது பாரத சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு கடந்த 25-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒளிமிகு பாரதம், ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி தொடர்பாக 2047 நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய, மாநில அரசுகள் மாற்று எரிசக்திக்கு வழங்கப்படும் மானியங்கள் மற்றும் மின்சாரத்தை வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட இடங்களில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு மின்சிக்கனம், மின் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.