மதுகுடிக்க கொள்ளையனாக மாறிய மின்வாரிய ஊழியர் கைது

குமாரபுரம் அருகே மதுகுடிக்க கொள்ளையனாக மாறிய மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-09 21:22 GMT

தக்கலை:

குமாரபுரம் அருகே மதுகுடிக்க கொள்ளையனாக மாறிய மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

உண்டியல் பணம் திருடிய நபர்

குமாரபுரம் அருகே உள்ள கொற்றிக்கோட்டில் சி.எஸ்.ஐ. ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் முன்பக்க கதவு அருகில் மரத்திலான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் மாலை இந்த உண்டியலில் உள்ள பணத்தை ஒருவர் குச்சி மூலம் நைசாக திருடி கொண்டிருந்தார். இதனை பார்த்த சபை செயலாளர் ஜேக்கப் சகரியா மற்றும் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனார்.

பின்னர் அவரை ஆட்டோவில் ஏற்றி கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். முட்டைக்காடு டாஸ்மாக் கடை அருகே சென்ற போது சிறுநீர் வருகிறது என அந்த நபர் ஏமாற்றியுள்ளர்.

தப்பி ஓட்டம்

இதனை நம்பிய டிரைவர் ஆட்டோவை நிறுத்திய போது திருடிய நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சபை செயலாளர் ஜேக்கப் சகரியா கொற்றிக்கோடு போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் விசாரணை நடத்தி அந்த நபரை தேடி வந்தார்.

இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு திருடிய நபர் சித்திரங்கோடு பஸ் நிறுத்தம் அருகில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மின்வாரிய ஊழியர் சிக்கினார்

உடனே சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபரை மடக்கி பிடித்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், மேக்காமண்டபம் ஆர்.சி.தெருவை சேர்ந்த பெனான்ஸ் (வயது 54) என்பதும், மின்வாரிய ஊழியர் என்பதும் தெரியவந்தது.

இவர் கோவையில் உள்ள அலுவலகத்தில் வேலை பார்த்த போது தொடர்ந்து மது குடித்துள்ளார். பின்னர் பணிக்கு செல்லாமல் மதுகுடிப்பதையே வழக்கமாக வைத்துள்ளார்.

வேலைக்கு செல்லாததால் மது குடிக்க பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் அவர் கொள்ளையனாக மாறியதும் விசாரணையில் அம்பலமானது. பெனான்ஸ் சின்ன, சின்ன திருட்டில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெனான்ஸை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்