மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
நெல்லையில் மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் நேற்று வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மின் பகிர்ந்தளிப்பு மற்றும் சீரான மின்சாரம், பாதுகாப்பாக வழங்குவது குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டது. நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி, பாளையங்கோட்டை துணை மின் நிலைய உதவி மின் பொறியாளர் தெரேசா பாக்கியவதி, புவியியல் தகவல் அமைப்பு உதவி மின் பொறியாளர் அந்தோணிராஜ், வி.எம்.சத்திரம் பிரிவு உதவி மின் பொறியாளர் செல்வம் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.