மின்வாரிய ஊழியர்கள் மறியல்; 240 பேர் கைது

மின்வாரிய ஊழியர்கள் மறியல்; 240 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-16 18:21 GMT

தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் அறிவித்தபடி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும். கே.2 மற்றும் சிட் ஒப்பந்தப்படி பல ஆண்டுகள் பணிசெய்த ஒப்பந்தப் பணியாளர்களை அடையாளம் கண்டு பணி நியமனம் வழங்கி, பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் இல்லை என்ற பொய்யான அறிக்கை அனுப்புவதை கைவிட்டு பணிச்சான்றிதழ் வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ.) சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு புதுக்கோட்டை கிளை திட்ட தலைவர் சித்தையன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி செயலாளர் நடராஜன், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 240 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்