இன்று மின்சாரம் நிறுத்தம்

கல்லாவி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-02-27 18:45 GMT

ஊத்தங்கரை

போச்சம்பள்ளி கோட்டத்திற்குட்பட்ட சிப்காட் போச்சம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் பாரண்டப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவணப்பட்டி, கெரிகப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிகுப்பம், சூளகிரி, ஓலைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்