இன்று மின்சாரம் நிறுத்தம்

ஜூஜூவாடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-12-02 18:45 GMT

ஓசூர் மின் வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓசூர் கோட்டம் ஜூஜூவாடி துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஜூஜூவாடி, மூக்கண்டபள்ளி, பேடரபள்ளி, தர்கா, பேகேபள்ளி, சின்ன எலசகிரி, சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்- 1 லிருந்து சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர் நகர், காமராஜர் நகர், எழில்நகர், ராஜேஸ்வரி லே அவுட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்