நாளை மின்சாரம் நிறுத்தம்
ஊத்தங்கரை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் ஊத்தங்கரை அம்பேத்கர் நகர், சேலம் ரோடு, பெரியார் நகர், காமராஜ் நகர், கலைஞர் நகர், ரெட்டியார் தோட்டம் பாபா நகர், வித்யா நகர், பஸ் நிலையம், பழைய கடைவீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.