4 கிராமங்களுக்கு தடையில்லா மின்சாரம்

`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக 4 கிராமங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது.

Update: 2022-09-22 18:45 GMT

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள இண்டன்குளம், சண்முகநாதபுரம், குப்பக்குளம், தாயனூர் ஆகிய 4 கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு முழுவதும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. மின்சாரம் இன்றி கிராம மக்கள் அவதிப்பட்டனர். இது சம்பந்தமாக `தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக மின்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் செந்தமிழ் நகர் அருகே உள்ள மின் இணைப்பு டிரான்ஸ்பார்மர் மற்றும் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின் வழித்தடங்களை உருவாக்கி தடையில்லா மின்சாரம் வழங்கினர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மக்களின் நலன்கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்