தர்மபுரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

தர்மபுரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

Update: 2022-06-14 16:58 GMT

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை துணை மின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் பாலக்கோடு, சுகர்மில், எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்த்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மல்லுப்பட்டி, மல்லாபுரம், பொரத்தூர், மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா என தெரிவித்துள்ளார்.

மொரப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மொரப்பூர், சென்னம்பட்டி, எலவடை, நைனாகவுண்டம்பட்டி, பனந்தோப்பு, கல்லூர், தம்பி செட்டிப்பட்டி, கட்டனூர், பனமரத்துப்பட்டி, சேடப்பட்டி, அப்பியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கடத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி செயற்பொறியாளர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சோகத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குமாரசாமிபேட்டை, ரெட்டிஅள்ளி, பிடமனேரி, பென்னாகரம் ரோடு, மாந்தோப்பு, ஜெட்டிஅள்ளி, அப்பாவு நகர், வெண்ணாம்பட்டி, ஆயுதப்படை குடியிருப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்