விக்கிரவாண்டியில் டிராக்டர் மோதி எலக்ட்ரீசியன் பலி

விக்கிரவாண்டியில் டிராக்டர் மோதி எலக்ட்ரீசியன் பலியானார்.

Update: 2023-10-14 18:45 GMT

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி பாரதி நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 47). எல்க்ட்ரீசியன். இவர் நேற்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக செங்கல் லோடு ஏற்றிச்சென்ற டிராக்டர் டிப்பர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டா்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உயரிழந்த மோகனுக்கு பென்னி(45) என்ற மனைவியும், காவியா(17) என்ற மகளும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்