அரிமளத்தில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

அரிமளத்தில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார்.

Update: 2023-05-05 19:02 GMT

அரிமளம் வையத்தி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58), எலக்ட்ரீசியன். நேற்று மதியம் அரிமளம் எட்டாம் மண்டகப்படி அருகே உள்ள வணிக வளாகத்தில் மின்சாரம் பழுது ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த மின் கம்பத்தில் செல்வராஜ் ஏறி பழுதை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்வராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வராஜை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்