எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

நாசரேத்தில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-09 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் ஸ்டேப்லி தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் காளீஸ்வரன். (வயது 26) இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு காளீஸ்வரன் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை 8 மணி ஆகியும் கதவு திறக்காததால் அவரது தாய் சென்று திறந்து பார்த்துள்ளார். அப்போது காளீஸ்வரன் மின்விசிசியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஜெயக்குமார் நாசரேத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்