பெண்ணை மிரட்டிய எலக்ட்ரீசியன் கைது
மூலைக்கரைப்பட்டி அருகே பெண்ணை மிரட்டிய எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி போலீஸ் சரகம் சின்ன மூலைக்கரை மெயின்ரோடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா மனைவி சுப்புலட்சுமி (வயது 36). கணவர் இறந்து விட்டதால் ஒரு மகள், ஒரு மகனுடன் வசித்து வருகிறார். மூலைக்கரைப்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்த மகாராஜா மகன் இசக்கிமுத்து என்ற பாண்டி. எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். கடந்த 5-ந் தேதி இரவு இசக்கிமுத்து என்ற பாண்டி, சுப்புலட்சுமி வீட்டுக்குள் நுழைந்து அவரை அவதூறாக பேசி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்புலட்சுமி மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இசக்கிமுத்து என்ற பாண்டியை கைது செய்தார்.