நாகை வடக்கு பால்பண்ணைச்சேரி, முல்லைநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சீரான மின்வினியோகம் இல்லை. திடீர், திடீரென மின்னழுத்தம் குறைவதும், மின்னழுத்தம் அதிகமாவதும் மாறி, மாறி ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டி.வி., பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதடைந்துள்ளன.