தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி எம்பளாயிஸ் பெடரேஷன் ஆகியவை இணைந்து காட்பாடி காந்திநகரில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தை நடத்தின. வெங்கடேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாநில செயலாளர் கோவிந்தராஜ், எம்பளாயிஸ் பெடரேஷன் மாநில செயலாளர் செந்தில், சி.ஐ.டி.யு செயலாளர் ஜெகன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆட்குறைப்பு செய்வதை கைவிட வேண்டும். வாரிய ஆணை எண் 2-ஐ ரத்து செய்ய வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயலாளர் ராஜராஜன் நன்றி கூறினார்.