மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

காட்பாடியில் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-26 16:56 GMT

காட்பாடி காந்திநகரில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு கூட்டு நடவடிக்கைக்குழு மண்டல செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தருமன், செந்தில், கிருபாகரன், சுந்தரம் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் துணை மின்நிலையங்கள் மற்றும் சில பணிகளை வெளி நபர்களுக்கு வழங்குவதையும், மறுபகிர்வு செய்வதையும் திரும்ப பெற வேண்டும். அகவிலைப்படி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில், மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மின் ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் காரணமாக அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்