மூங்கில்துறைப்பட்டு அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி போலீசார் விசாரணை
மூங்கில்துறைப்பட்டு அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலியானார்.
வடபொன்பரப்பி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ராவத்தநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பள்ளிப்பட்டான் மகன் மணிகண்டன் (வயது 21). கடுவனூர் இளம் மின் பொறியாளர் அலுவலகத்தில் தற்காலிக மின் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் அதே ஊரில் உள்ள விவசாயிக்கு சொந்தமான வயலில் பழுதான மின் மோட்டாரை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்கம்பத்தில் இருந்து அறுந்து தொங்கிய ஒயரை எதிர்பாராமல் அவர் தொட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.