லஞ்சம் வாங்கி கைதான மின்ஊழியர் பணியிடை நீக்கம்
பேரணாம்பட்டு அருகே லஞ்சம் வாங்கியதில் கைது செய்யப்பட்ட மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அருகே லஞ்சம் வாங்கியதில் கைது செய்யப்பட்ட மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
லஞ்சம்
பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (வயது 55). இவர் அதே கிராமத்தில் பெட்டி கடையில் இட்லி மாவு அரைக்கும் கடை நடத்தி வந்தார்.
இதனால் இவருக்கு மின் கட்டணம் அதிகமாக வந்தது. இதனையடுத்து சிவா சிறு குறுந்தொழில் சான்று பெற்று அந்த சான்று மூலம் மின்கட்டண விகித மின் இணைப்பை மாற்றக்கோரி ஆன்லைனில் மேல்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.
சிவாவை மேல்பட்டி மின்வாரிய வணிக ஆய்வாளர் மதன் என்பவர் வரவழைத்து சிறு தொழில் கட்டண விகிதத்திற்கு மாற்றி வழங்குவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
பணியிடை நீக்கம்
அதற்கு சிவா தன்னால் அவ்வளவு பணம் தர முடியாது என மறுத்தார். இதனை ஏற்காத வணிக ஆய்வாளர் ரூ.4 ஆயிரத்து 500 தர வேண்டும் என கூறினார்.
இதையடுத்து கடந்த 16-ந் தேதி பணியில் இருந்த வணிக ஆய்வாளர் மதனிடம் ராசயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை சிவா கொடுத்தார். அப்போது மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் வணிக ஆய்வாளர் மதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் மின்வாரிய பொறியாளர் ராமலிங்கம், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட மதன் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.