பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து பொம்மிடி செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையின் குறுக்காக மின்கம்பிகள் தாழ்வாக சென்றது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு அந்த வழியாக அதிகளவு பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. இந்த லாரி மின் கம்பி மீது உரசியது. இதனால் மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. மின் கம்பி அறுந்ததால் அந்த பகுதி இருளில் மூழ்கியது. அதனை மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.