தூய்மை பணியாளர்களுக்கு மின்சார வாகனம்
சிவகிரி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மின்சார வாகனம் வழங்கப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி பேரூராட்சியில் நகர்ப்புற கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு 14 மின்சார வாகனங்கள் வாங்கப்பட்டு அதன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்.முத்தையா பாண்டியன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற அனைத்து கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.