சென்னை தாம்பரத்தில் மின்சார ரெயில்கள் நிறுத்தம் - பேருந்துகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.;

Update: 2023-10-01 09:13 GMT

சென்னை,

தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரெயில்கள் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 10.35 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல் நாளையும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில்கள் இயக்கப்படாது என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் தற்போது பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்குப் பிறகு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் மாநகர பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்