மின்சார ரெயில்கள் ரத்து: பேருந்துகளில் அலைமோதும் கூட்டம் - ஸ்தம்பிக்கும் சென்னை சாலைகள்
மின்சார ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளதன் காரணமாக மாநகர பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது.;
சென்னை,
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை தாம்பரம்-கடற்கரை இடையே பிற்பகல் வரை ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டு உள்ளது. ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளதன் காரணமாக மாநகர பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது. மேலும், தாம்பரம் பகுதிகளில் ஆட்டோக்களின் மூலம் மக்கள் பயணம் மேற்கொள்வதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.