செங்கோட்டை- நெல்லை இடையே மின்சார ரெயில் இயக்கம்
செங்கோட்டை- நெல்லை இடையே மின்சார ரெயில் இயக்கப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை- நெல்லை இடையே மின்சார ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்ததை தொடர்ந்து செங்கோட்டை ெரயில் நிலையத்தில் இருந்து நெல்லைக்கு நேற்று காலை 6.45 மணிக்கு மின்சார ெரயில் புறப்பட்டுச் சென்றது.
இந்த ெரயில் தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் நின்று சென்றது. முன்னதாக ெரயில் என்ஜின் டிரைவர்கள் சிவகுமார், விஷ்ணு பிராஜ் ஆகியோருக்கு செங்கோட்டை ெரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் செயலாளர் கிருஷ்ணன், மக்கள் தொடர்பு அதிகாரி ராமன் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். மேலும் ெரயில் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.