மின்சாரம் தாக்கி பெண் பலி
பேரளம் அருகே மாடு மேய்க்க சென்ற போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தாா்.;
நன்னிலம்;
பேரளம் அருகே மாடு மேய்க்க சென்ற போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தாா்.
மின்சாரம் தாக்கியது
திருவாரூர் மாவட்டம் பேரளம் கொல்லுமாங்குடி அருகே உள்ள அகரமேடு கிராமத்தை சேர்ந்தவர் வேம்பு (55வயது). இவர் நேற்று மதியம் தனக்கு சொந்தமான பசுமாட்டை அருகில் உள்ள வயலில் மேய்க்க சென்றார். அப்போது அங்கு வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை வேம்பு எதிர்பாராதவிதமாக மிதித்தார். இதில் வேம்பு மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தாா்.
வழக்குப்பதிவு
இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து பேரளம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேம்பு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.