துணியை இஸ்திரி செய்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலி

கோட்டூ்ர் அருகே துணியை இஸ்திரி செய்தபோது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார்.

Update: 2023-05-24 19:00 GMT

திருமக்கோட்டை, மே.25-

கோட்டூ்ர் அருகே துணியை இஸ்திரி செய்தபோது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார்.

துணியை இஸ்திரி செய்தார்

திருவாரூா் மாவட்டம் பெருகவாழ்ந்தான் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மண்ணுக்குமுண்டான் ஊராட்சி பெருவிடைமருதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 35). இவர், மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கோப்பெருந்தேவி(31). இவர்களுடைய மகன் நித்திஷ்(7).கோப்பெருந்தேவி தனது மகன் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார். நேற்று மாலை கோப்பெருந்தேவி தனது வீட்டில் மின்சார இஸ்திரி பெட்டி மூலம் துணியை இஸ்திரி செய்து கொண்டு இருந்தார்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோப்பெருந்தேவியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினா் சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோப்பெருந்தேவி பரிதாபமாக இறந்தார்.இது குறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.துணியை இஸ்திரி செய்த போது மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்